என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சி.பி.ஐ. கோர்ட்டு
நீங்கள் தேடியது "சி.பி.ஐ. கோர்ட்டு"
ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. #AircelMaxisCase #Chidambaram #EnforcementDirectorate
புதுடெல்லி:
ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளன. கடந்த 25-ந் தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அவரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) வரை இத்தடையை நீட்டித்தது.
இதற்கிடையே அமலாக்கத்துறை நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ப.சிதம்பரம் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அவரை காவலில் எடுத்து விசாரிக்காத வரை இந்த வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வர இயலாது. மேலும் அவர் இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #AircelMaxisCase #Chidambaram #EnforcementDirectorate

×

X